கருப்பசாமி கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

திருச்சி மாவட்டம் துறையூர் கருப்பசாமி கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

துறையூரை அடுத்த முத்தையன்பாளையம் கருப்பசாமி கோவிலில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு பிடி காசு வழங்கும் திருவிழா நடைபெற்றது. பூசாரியிடம் பிடிக்காசு வாங்குவதற்காக ஏராளமான பக்தர்கள் அப்பகுதியில் குவிந்தனர். அப்போது பிடிக்காசு வாங்குவதற்காக பக்தர்கள் முண்டியடித்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7பேர் உயிரிழந்தனர். பலியானவர்களின் உடல்களை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version