தமிழகத்தின் 34 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட துவக்க விழாவிற்கு வந்த முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை செயல்பாட்டை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில்துணைமுதலமைச்சர் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனைகள் பற்றி பேசினார்.மேலும் மக்களுக்கான நலத்திட்டங்களை தனது தலைமையிலான அரசு பார்த்து பார்த்து கொண்டு வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நாள்தோறும் அதிமுக அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதில் வல்லவராக இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் சட்டதுறை அமைச்சர் சிவி. சண்முகம் கள்ளக்குறிச்சியை மாவட்டமாக பிரிக்க கோரி எந்த போராட்டமும் நடத்தப்படவில்லை என்றும், கேட்காமலையே முதலமைச்சர் செய்து கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.