`கணவருடன் செல்ல விருப்பம்’ – கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு வழக்கு முடித்து வைப்பு

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவுடன் செல்ல அவரது மனைவி சவுந்தர்யா விருப்பம் தெரிவித்ததால், வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு, தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சவுந்தர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து, சவுந்தர்யாவை மீட்டுத்தரக்கோரி அவரது தந்தை சுவாமிநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணையும், அவரது தந்தையையும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, எம்.எல்.ஏ பிரபுவின் காதல் மனைவி சவுந்தர்யா, மற்றும் அவரது தந்தை சுவாமிநாதன் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் இருவரிடமும் தனித்தனியே நீதிபதிகள் விசாரணை நடத்தினர். பின்னர், தந்தை – மகள் இருவரும் கலந்து பேசி தங்களது முடிவைத் தெரிவிக்க நீதிமன்றம் வாய்ப்பளித்தது. அப்போது, தனது கணவர் எம்.எல்.ஏ. பிரபுவுடன் செல்ல சவுந்தர்யா விருப்பம் தெரிவித்ததால், வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Exit mobile version