குடிமராமத்து பணியின் கீழ் தூர்வாரப்படும் காலிங்கராயன் குளம்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள காலிங்கராயன் குளத்தின் தூர்வாரும் பணிகள் பூமி பூஜையுடன் துவங்கப்பட்டது.

கொண்டையம்பாளையத்தில் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட காலிங்கராயன் குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. கோவையில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் குடிமராமத்து பணிகள் மூலம் தூர்வாரப்பட்டு வரும் நிலையில், காலிங்கராயன் குளத்தையும் தூர்வாரும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.சி. ஆறுகுட்டி தலைமையில் நடைபெற்ற இந்த துவக்க விழாவிற்கு, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் முன்னிலை வகித்தார். பூமி பூஜைக்கு பின் குளத்தின் கரைகளில் பனை விதைகள் நடும் நிகழ்வும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version