வனப்பிரியர்கள் நிச்சயம் மிஸ் பண்ணக்கூடாத “காலேசர் தேசிய பூங்கா”

வெளிநாடுகளுக்கு சென்றுதான் விடுமுறையை கொண்டாட வேண்டும் என்ற ஆசை நம்மில் பலரிடம் இருக்கிறது…ஆனால் அதற்கான பட்ஜெட், பயண விவரங்கள் எல்லாம் பட்டியலிட்டால்…பலருக்கு அந்த ஆசையே இல்லாமல் போய்விடும்….அவர்களுக்காக இந்தியாவிலேயே இயற்கையாக அமைந்த பல இடங்கள் கொண்டாட காத்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் “காலேசர் தேசிய பூங்கா”.

ஹரியானாவிலுள்ள யமுனாநகரி அமைந்துள்ள இந்த சரணாலயம் வனப்பிரியர்களுக்கான கனவு இடமாகும். இந்தியாவில் சிறந்த பூங்காக்களில் ஒன்றாக திகழும் இந்த காலேசர் தேசிய பூங்கா இமாச்சல பிரதேசம், உத்திரபிரதேசம், உத்திரகாண்ட் ஆகிய மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. அதன் ஒரு பக்கத்தில் யமுனா நதி பாய்கிறது.

11570 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காலேசர் வனவிலங்கு சரணாலயத்தில் சிறுத்தைகள், யானைகள், காட்டுப்பன்றி என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதற்குள் செல்ல மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். அந்த பூங்காக்குள் சுற்றுலாப்பயணிகள் ஓய்வெடுக்க இடமும் உள்ளது. மேலும் வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோவிலும் இங்கு அமைந்துள்ளது.

இதன் அருகிலேயே இயற்கை ஆர்வலர்களுக்கான சௌத்ரி தேவி லால் மூலிகை இயற்கை பூங்காவும் அமைந்துள்ளது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த அரிய வகை மரங்கள் அமைந்துள்ளன.

சண்டிகரில் இருந்து 122 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பூங்கா பூங்கா ஜூலை முதல் செப்டம்பர் வரை மூடப்பட்டிருக்கும். மீதமுள்ள மாதங்களில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையும், கோடைகாலங்களில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும், குளிர்காலத்தில் காலை 7 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

வாழ்க்கையில் இயற்கையோடு நேரம் செலவழிக்க விரும்புபவர்கள் இந்த இடத்திற்கு செல்ல மறக்காதீர்கள்…!

Exit mobile version