தமிழக பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பாக கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த 2011 ஆண்டில் இருந்து 2018ஆம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுகளை, இன்று வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.
விழாவில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பிரபு தேவா, விஜய் ஆண்டனி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சந்தானம், நடிகை பிரியா மணி உள்பட 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலைமாமணி விருதுகளை பெறுகின்றனர்.