தென்னிந்திய திரைப்படங்களில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால் முதலில் ஹிந்தியில் 2004 ல் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான “கியூன்!! ஹோ கயா நா” படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். பின் இவர் தெலுங்கில் லட்சுமி கல்யாணம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.சந்தமாமா என்ற படத்தில் நடித்து மிகப்பெரிய ஒரு வெற்றியை பாக்ஸ் ஆபீஸில் கொடுத்ததன் மூலம் திரைதுறையில் மிகவும் பிரபலமானார். இது தெலுங்கு திரைப்படதுறையில் இவரின் நடிப்புத் திறமையை அனைவருக்கும் வெளிக்காட்டி அடையாளப்படுத்தியது. ((இந்நிலையில் இவரது முதல் படமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்தது.))
ஆனாலும் காஜல் அகர்வாலுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை உலக அளவில் பெற்றுத்தந்தது மகதீரா என்ற வரலாற்று சிறப்புமிக்க திரைப்படம்தான், பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் உடன் இணைந்து நடித்த மகதீரா படத்தில் இவர் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ((மேலும் இந்த படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டு நல்ல திரைக்கதை அம்சத்துடன் வெளியானது. அதில்))
மித்ராவாக நடித்த இவரின் கதாபாத்திரம் இன்றும் கூட கண்ணீரை வரவழைக்கும்.
இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, பாக்ஸ் ஆபீஸ்களை வசூல் மழையால் தெறிக்க விட்டது. பின்னாளில் இது தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிடப்பட்டது. மகதீரா படத்திற்காக பல விருதுகளை விருதுகளை பெற்றார் காஜல் அகர்வால்
.
((தெலுங்கில் வெற்றிகரமாக நடித்து வந்த அதேவேளையில் தமிழிலும் தனது அறிமுகத்தை கொடுத்து வந்தார்.)) தமிழில் பரத் நடித்து இயக்குனர் பேரரசு இயக்கிய பழனி, ((என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும் இவர்)) வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா, ((என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திலும் அதைத் தொடர்ந்து)) பொம்மலாட்டம், மோதி விளையாடு போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.
2010 ல் கார்த்தி உடன் இணைந்து நடித்த நான் மகான் அல்ல படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது, குண்டுக் கண்களும் குறும்புப் பார்வையுமாக. காஜல் அகர்வால். ((வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகிகள் செய்ததையே ஆயிரத்து எட்டாவது தடவையாக செய்திருந்தாலும் )) கண்ணோரம் காதல் வந்தால் பாடல் மூலம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் காதல் தேவதையாக உருவெடுத்தார் என்றே சொல்லலாம்.
அதன் பிறகு தெலுங்கு , ஹிந்தி என பிசியான காஜல் 2012 ல் சூர்யாவுடன் இணைந்து நடித்த மாற்றான் திரைப்படத்தில் இவருக்கு சொல்லும் அளவுக்கு பங்கு இல்லை என்றாலும் பாடல்கள் மூலம் தன்னை தக்கவைத்து கொண்டார். அதே ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயுடன் இணைந்து நடித்த துப்பாக்கி திரைப்படம் ஹிட் படமாக அமைந்தது
((நிஷாவாக நடித்த கஜால் அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார், அதிலும் விஜய் பெண் பார்க்க வரும் காட்சி இப்போதும் அத கல சிரிப்புதான். அந்த படத்தில் இடம் பெற்ற கூகுல் கூகுள் பண்ணி பாத்தேன் உலகத்துல பாடல் விஜய்க்கு மட்டும் அல்ல காஜலுக்கும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது என்றே கூறலாம்))
2013 ல் மீண்டும் கார்த்தியுடன் இணைந்து ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் சித்ரா தேவி பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை, அதே ஆண்டு வெளியான ஜில்லா திரைப்படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்த காஜலுக்கு கண்டாங்கி, மாமா எப்போ ட்ரீட்டு பாடல்கள் தான் ரசிக்கும் படியாக இருந்த்து.
பாலாஜி மோகன் இயக்கத்தில் 2018 வெளியான மாரி திரைப்படம் கஜால் அகர்வாலுக்கு திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம் மாரியை முதலில் பழிவாங்குவதிலும் சரி பிறகு காதலிப்பதிலும் சரி தன்னுடைய நடிப்பால் மீண்டும் இளைஞர்களை கவர்ந்திர்ருப்பார் காஜல்..
))
2017 ல் வெளியான விவேகம், திரைப்படத்தில் தனது கணவரின் மீது உள்ள அன்பை சொல்லும் காட்சியிலும், மெர்சல் திரைப்படத்தில் விஜயுடன் வரும் காதல்காட்சியிலும் மாச்சோ நடன காட்சியிலும் அசத்தியிருப்பார் காஜல் அகர்வால்.
இவ்வாறு தனது வெற்றியை படிப்படியாக நிலைநிறுத்திக் கொண்ட காஜல் அகர்வால் இப்போது அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகர்களாக உள்ள பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார். ஆனாலும் உங்களின் அலைபேசியிலோ, தொலைகாட்சியிலோ, கண்டாங்கி பாடாலோ, காண்ணோரம் காதல் வந்தால் பாடல் ஒலிக்கும் போது உங்களின் மன கண்முன்னே வந்து போவார் காதல் தேவதை காஜல் அகர்வால்..