கஜா புயல் நிவாரண நிதியாக 1,146 கோடி ரூபாயை ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அப்பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொண்ட தமிழக அரசு, 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரியிருந்தது. இதையடுத்து, முதற்கட்டமாக, 353 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியிருந்தது. இதனைத்தொடர்ந்து, தற்போது ஆயிரத்து 146 கோடியே 12 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதிக்கு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.