வடகிழக்கு பருவமழையால் முழு கொள்ளளவை எட்டிய கடனாநதி அணை

வடகிழக்கு மழை தீவிரமடைந்ததை அடுத்து நெல்லை மாவட்டம் கடையம் அருகேயுள்ள கடனாநதி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து 3வது நாளாக மிதமான மழை பெய்து வருவதால், கடனாநதி அணை ஒரு மாத காலத்திற்குள் இரண்டாவது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டியது.85 கன அடி கொண்ட இந்த அணை மூலம் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.   இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் விவசாயப் பணிகளில் மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது கடனாநதி அணைக்கு 148 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி நீர்வரத்து முற்றிலும் வெளியேற்றப்படுகிறது.

Exit mobile version