புதிய தலைமை செயலக வழக்கில் ஸ்டாலின் விரைவில் சிறைக்குச் செல்வார் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவள்ளி அம்பாள், உடனுறை பூவனநாத கோயில் ஐப்பசி திருக்கல்யாணத்தையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தங்களுக்கு ஒரு அனுபவம் என்று கூறினார். இடைத்தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது முதலமைச்சர், துணை முதலமைச்சர் கவனமாக செயல்படுவார்கள் என்று கூறிய அவர், உண்மையான தொண்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். புதிய தலைமைச் செயலகம் தொடர்பான வழக்கினை கண்டு திமுக அஞ்சுவதாகவும், அந்த வழக்கில் ஸ்டாலின் சிறை செல்லும் நிலை உருவாகும் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post