தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த செயல்திட்டம் வகுப்பது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இதற்கான செயல்திட்டம் வகுப்பது தொடர்பாக உள்ளாட்சித் துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பிளாஸ்டிக் தடையை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுடன், சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் ஆலோசனை நடத்தினார்.
Discussion about this post