கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா இலங்கை மற்றும் இந்திய கிருஸ்தவர்களால் கோலகலமாக கொண்டாடப்பட்டது
கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் கொடியேற்றி வைத்து திருவிழாவைத் துவங்கி வைத்தார். இந்த திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 453 கிருஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டையும், கடல் பயணத்தை பாதுகாப்பாக மேற்கொள்வதற்காக லைஃப் ஜாக்கெட்டும் வழங்கப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக இந்திய கடற்படையைச் சேர்ந்த ஹோவர் கிராப்ட் கப்பல்களும், இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல்களும் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு அதிகளவு சிங்கள பக்தர்கள் வருகை தந்ததால் தமிழ் மற்றும் சிங்கள மொழியிலும் திருப்பலி நடைபெற்றது. சனிக்கிழமை காலை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஆயர்கள் பங்கேற்றனர்