பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கபடி விளையாட்டை சேர்க்க முயற்சி எடுப்போம் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்..
நீண்ட காலமாகவே கபடி விளையாட்டில் உலக அரங்கில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆசிய விளையாட்டில் இந்தியா தற்போது வரை 7 தங்கம் வென்றுள்ளது ஒரு சாதனையாகவே கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டில் பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில், கபடி விளையாட்டை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து தெரிவிக்கையில், உள்நாட்டில் விளையாட்டு எந்தளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு கபடி சிறந்த எடுத்துக்காட்டு என்றும், பாரிஸ் ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டை சேர்ப்பதற்கு முயற்சி எடுத்து வருவதாகவும் கூறினார்.