அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே சசிகலா கருத்துகளை வெளியிட்டு வருவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.
சசிகலா கூறும் கருத்துகளுக்கு அதிமுகவின் ஒரு தொண்டர் கூட செவிசாய்க்க மாட்டார் என்றும், அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு போதும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுகவில் உள்ள தொண்டர்கள் யாரும் சசிகலாவுடன் பேச வில்லை என்று கூறிய அவர், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே சசிகலா கருத்துகளை வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
சசிகலாவுடன் உள்ளவர்கள், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலாவை தூண்டி விடுவதை, சசிகலா உணர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.