இசை உலகின் 'நிரந்தர இளைஞன்' கே.ஜே. யேசுதாஸின் 82வது பிறந்ததினம்

இசை ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ள பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸின் 82வது பிறந்த தினம் இன்று. அவரது பாடல்களையும் அவைகள் செய்த மாயங்களையும் தற்போது பார்க்கலாம்.

1940ம் ஆண்டு கேரளாவில் பிறந்த கே.ஜே. யேசுதாஸ், முறைப்படி சங்கீதம் பயின்றவராக இசையுலகில் அடியெடுத்து வைத்தார். மலையாளத் திரைப்படங்களில் பாடல்களைப் பாடி வந்த அவர், வீணை எஸ். பாலசந்தரின் ‘பொம்மை’ படத்தில் இடம்பெற்ற ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார்.

மென்மையும் அமைதியுமே அவரது குரலின் அடையாளமாகிப் போனது. அது, பெருமழைக்குப் பின்னர் மனதை குளிர்விக்கும் சாரலைப் போன்று ஆன்மா நிரம்பியதாக பாடல்களில் வெளிப்படும்.(( பூவே செம்பூவே பாடல் ))

அதேபோல், யேசுதாஸின் குரலும் அவரது பாடல்களும், தாயின் பேரன்பிற்கு நிகரானதாகச் சொல்லலாம். ஒவ்வொரு முறையும் ரசிகர்களைத் தாலாட்டும், தலைகோதி துயர் போக்கும், தாய் மடியைப் போன்று அரவணைத்து அமைதிகொள்ள செய்திடும்.

(( அம்மாஎன்றழைக்காத உயிரில்லையே பாடல் ))

எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், தேவா, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, அனிரூத் என 4 தலைமுறை இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ள யேசுதாஸ், தனது குரலின் சுயத்தை ஒருபோதும் இழக்கவில்லை என்பதே உண்மை.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பல பாடலகளைப் பாடியுள்ள அவர், பல விருதுகளையும் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

இசை ரசிகர்களால் தெய்வீக குரலோன் என கொண்டாடப்படும் பாடகர் யேசுதாசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி மகிழ்கிறது நியூஸ் ஜெ.

 

 

Exit mobile version