சென்னை மயிலாப்பூரில் நடைபெற்று வரும் சணல் பொருட்கள் கண்காட்சியில் தலை முதல் கால் வரை நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் அனைத்துமே சணல் பொருளில் தயார் செய்யப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் சணல் என்றால் நெல் அள்ளுவதற்கும், வெங்காயம் மூட்டை கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த சாக்குமூட்டை தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய காலணி, காதில் போடக்கூடிய தோடு, கழுத்தில் அணியக்கூடிய செயின் தொடங்கி வீட்டில் அலங்கரித்து வைக்கப்படும் அலங்கார பொம்மைகள் என அனைத்தும் சணலால் தயாரிக்கப்படுகின்றன. சணலால் தயார் செய்யப்படும் பொருட்களை பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறுகிறார் சணல் பை விற்பனையாளர் விஜயா