அயோத்தி வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகல்

அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி யு.யு. லலித்க்கு மனுதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து வழக்கில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இதே வழக்கில் உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கிற்கு ஆதரவாக யு.யு.லலித் வழக்கறிஞராக வாதாடி உள்ளார். எனவே அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் அவர் அங்கம் வகித்தால் வழக்கு ஒரு தலைப்பட்சமாக மாறிவிடும் என வழக்கறிஞர் ராஜூவ் தவான் தெரிவித்தார். இதையடுத்து வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகினார். வழக்கு வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Exit mobile version