கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுட்ட மூதாட்டி

மஹா சிவராத்திரியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் முத்தம்மாள் என்ற மூதாட்டி, கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் சிவராத்திரியையொட்டி, 40 நாட்கள் விரதம் இருந்து வெறும் கைகளால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு நேர்த்திகடன் செலுத்துவது வழக்கம். அதனடிப்படையில் வருடம் தோறும் நேர்த்திக்கடன் செலுத்திவரும் முத்தம்மாள் என்ற மூதாட்டி, இந்தாண்டும் 40 நாட்கள் விரதம் இருந்து வெறும் கையால் அப்பம் சுட்டு பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த அப்பத்தை வாங்கி உண்டால் நோய்கள் சரியாகும் என்றும் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version