ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதல்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், வங்கதேச அணியை இந்திய அணி இன்று எதிர்கொள்கிறது.

16 அணிகள் பங்கேற்ற ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் தொடர் முழுவதும் தோல்வியை சந்திக்காத, நடப்பு சாம்பியன் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதே போல், நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, உலக கோப்பை தொடரில் முதன் முறையாக இறுதிப்போட்டிக்கு வங்கதேச அணி முன்னேறியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் இறுதிப்போட்டி போட்செப்ஸ்ட்ரூம்மில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதே வங்கதேச அணியும் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். 4 முறை சாம்பியான இந்திய அணி இம்முறையும் வென்று பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் என இந்திய ரசிகர் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Exit mobile version