தன்னை பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளரை கொலை செய்த விவகாரத்தில், சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், தனது ஆசிரமத்தில் இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று ஹரியானா மாநிலம் ரோக்டக்கின் சுனாரியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து நடைபெற்ற கலவரத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் பூரா சச் என்ற பத்திரிகையாளர் கொலை வழக்கில் குர்மீத் மீது பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டது. குர்மீத் ஆசிரமத்தில் பெண்களுக்கு எதிராக செய்த வன்கொடுமைகள் குறித்த உண்மையை பூரா சச் வெளியிட்டதால் அவர் கொல்லப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதையடுத்து குர்மீத் அடைக்கப்பட்டுள்ள சுனாரியா சிறைச்சாலை அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.