வரலாற்றில் முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விபரங்கள் தமிழில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கி வரும் தீர்ப்புகள் தற்போது, தமிழில் முதன்முறையாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளன. சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலன் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மற்றும் நீலகிரியை சேர்ந்த ஜோசப் ஈஸ்வரன் வாப்ஷேரின் சொத்துக்கள் தொடர்பாக அவரது வாரிசுகள் தொடர்ந்த வழக்கு ஆகிய 2 வழக்குகளின் தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியானது.
உச்ச நீதிமன்ற வரலாற்றில் தீர்ப்புகள் தமிழில் வெளியாகி இருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.