சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் இருந்தார். இவர் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம், நீதிபதி ஹுலுவாடி ரமேஷை மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை செய்திருந்தது. இந்தநிலையில் நீதிபதி ஹுலுவாடி ரமேஷை மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இம்மாதம் 22ஆம் தேதிக்குள் ஹூலுவாடி ரமேஷ், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.