பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை தொடர்பான 5 பேருக்கு மரண தண்டனை -சவுதி அரேபிய அரசு

பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் தொடர்புடைய 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

சவுதி அரேபிய அரசு மற்றும் அந்நாட்டு இளவரசரை தொடர்ந்து விமர்சித்து வந்த பத்திரிகையாளர் கசோகி, கடந்த அக்டோபர் 2-ம் தேதி துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் மாயமானார்.

அவர் மாயமான விவகாரம் சர்வதேச அளவில், சவுதி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து தூதரகத்தில் கசோகி கொல்லப்பட்டதை சவுதி அரசு ஒப்புக் கொண்டது. மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, சவுதிக்கு பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அரசிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டதை அடுத்து, ஜமால் மாயமானது குறித்து விசாரணைக்கு சவுதி அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜமால் கசோகி கொலையில் தொடர்புடைய 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த கொலை சம்பவத்தில் இளவரசர் முகமதுக்கு தொடர்பில்லை என்று அந்நாட்டு அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version