ஹாங்காங்கில் சீன அரசை தொடர்ந்து விமர்சித்து வந்த பத்திரிக்கை அதிபர் கைது!

சீன அரசு குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்த ஹாங்காங் முன்னணி பத்திரிகையின் அதிபர் ஜிம்மி லாய் கைது செய்யப்பட்டார். ஹாங்காங்கில், சீன அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை கட்டுப்படுத்தும் விதமாக தேசிய பாதுகாப்புச் சட்டம் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் கீழ், சீன கம்யூனிச அரசுக்கு எதிராக போராடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். சீனாவின் அடக்குமுறை குறித்து தொடர்ந்து எழுதி வந்த, ஹாங்காங்கின் ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் நிறுவனர் ஜிம்மி லாய் கைது செய்யப்பட்டுள்ளார். ஜிம்மி லாயுடன் அவரது இரு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுடன் ரகசியத் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி ஜிம்மி லாயை சீன அரசு கைது செய்துள்ளது.

Exit mobile version