திருவாரூர் அருகே அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அமமுக-விலிருந்து விலகி அதிமுக-வில் இணைந்தனர்.
திருவாரூர் அருகே, அமமுக-விலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் விலகி, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர்.
மன்னார்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை கிரமத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் குலோத்துங்கன் தலைமையில் அமமுகவில் இருந்து விலகியவர்கள், அதிமுகவில் இணைந்தனர்.
இவர்களை அமைச்சர் காமராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார். இதே போன்று, பைங்காநாடு, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், மாற்று கட்சியிலிருந்து விலகி பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.