ஜே.என்.யு பல்கலை. மாணவர் போராட்டத்திற்கு தீர்வு காண உயர்மட்ட குழு அமைக்க உத்தரவு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு சுமூக தீர்வு காண உயர்மட்ட குழுவை அமைத்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி கட்டணம் உயர்வு, விடுதிக்கட்டண உயர்வு ஆகியவற்றை முழுமையாக பல்கலைக்கழக நிர்வாகம் திரும்பப் பெற வலியுறுத்தி மாணவர்கள் அமைப்பு சார்பில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். இதனால் நாடாளுமன்றத்தை சுற்றிலும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல்கலைக்கழக நிர்வாகம் கட்டண உயர்வை திரும்ப பெறுவதாக கூறியிருந்தது. ஆனால் கட்டண உயர்வு திரும்ப பெறாததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தற்போது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு சுமூக தீர்வு காண மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.

Exit mobile version