தமிழக சட்டம்-ஒழுங்கு காவல்துறையின் புதிய இயக்குநராக ஜே.கே.திரிபாதி நியமனம்

தமிழக சட்டம்-ஒழுங்கு காவல்துறையின் புதிய இயக்குநராக ஜே.கே.திரிபாதியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குநராக டி.கே.ராஜேந்திரன் பதவி வகித்து வருகிறார். இவருடைய பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்தநிலையில் புதிய சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குநரை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு மும்முரமாக ஈடுபட்டிருந்தது.

இந்தநிலையில் தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு புதிய இயக்குநராக ஜே.கே.திரிபாதியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஜூலை 1 ஆம் தேதி அன்று தனது பொறுப்பை அவர் முறைப்படி ஏற்றுக்கொள்கிறார். 1985 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version