காஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடிய ராணுவத்தினர்

காஷ்மீரில் விடிய விடிய நீடித்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் உள்ள குடுபோரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இதையறிந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இரவு முழுவதும் அந்த பகுதியில் துப்பாக்கிச்சண்டை நீடித்தது. இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சில தீவிரவாதிகள் தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. தப்பிச் சென்ற தீவிரவாதிகள் விட்டுசென்ற ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, தீவிரவாதிகள் பதுக்கி உள்ளனராக என்று, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version