snapchat செயலியுடன், ஜியோ நிறுவனம் இணைந்து வீடியோ போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
டெல்கோ நிறுவனம் snapchat செயலியுடன் இணைந்து சிறப்பு snapchat லென்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் snapchat பயன்படுத்துபவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து நேரத்தை செலவழிப்பதை அடிப்படையாகக் கொண்டே போட்டி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் snapchat செயலியில் உள்ள லென்சை பயன்படுத்தி அதில் உள்ள சிறப்பம்சங்களான தொப்பி, மோதிரங்கள், மைக் ஆகியவற்றை உபயோகித்து 10 விநாடி வீடியோ ஒன்றை பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்த வீடியோவை ‘எங்கள் கதை’ என்ற தலைப்பில் snapchat ஐடி அல்லது snap code உடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களுக்கு ஜியோ நிறுவனத்தின் இலவச ரீசார்ஜ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான கடைசி தேதி பிப்ரவரி 4-ஆம் தேதியாகும். இந்த போட்டியில் ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு போட்டியாளர் இலவசமாக தாய்லாந்து நாட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.