ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 13 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்ட்டில் உள்ள மொத்தம் 81 தொகுதிகளுக்கு 5 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 23-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அந்த வகையில், முதல் கட்டமாக இன்று சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு துவங்கியது முதலே, மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஜார்க்கண்டில் ஆளும் பாஜக முதல் முறையாக கூட்டணி அமைக்காமல் போட்டியிடுகிறது. பாஜகவுக்கு எதிராக ஜே.எம்.எம் கூட்டணி போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. வாக்குப்பதிவையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.