ஜார்க்கண்ட் மாநிலத்தில் வளர்ச்சிக்கான பாதை திறக்கப்பட்டுள்ளது: அமைச்சர் அமித் ஷா

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் இயக்கத்தை வேருடன் களைந்த பாஜக அரசு, வளர்ச்சிக்கான பாதையைத் திறந்துவிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டிச் சக்ரதார்பூர் என்னுமிடத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசினார். அப்போது, கடந்த ஐந்தாண்டுகளில் மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசும், மாநில அரசும் ஜார்க்கண்டில் நக்சல் இயக்கத்தை வேருடன் களைந்துள்ளதாகத் தெரிவித்தார். இதனால் மாநிலத்தின் வளர்ச்சிக்கான பாதையைத் திறந்துவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நோக்கம் ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டுமே எனவும், பாஜகவின் நோக்கம் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வது மட்டுமே எனவும் அமித் ஷா தெரிவித்தார். காங்கிரசின் கபில் சிபல் அயோத்தி வழக்கைத் தாமதப்படுத்தப் பார்த்ததாகக் குற்றஞ்சாட்டிய அமித் ஷா, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான வழி பிறந்துள்ளதாகத் தெரிவித்தார்.

Exit mobile version