சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 5ஆயிரம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும் என ஜார்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் விதமாக, சிறுகுறு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ரகுபார் தாஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 20 லட்சத்து 22 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.
முதலமைச்சரின் கிரிஸ்ஸிஆசிர்வாத் ஜோஜ்னா என்ற திட்டத்தின் கீழ், இந்த நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் 2ஆயிரத்து 250 கோடி ரூபாயை அரசு ஆண்டிற்கு செலவிட உள்ளது. மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்துள்ளன. இந்நிலையில் பாஜக ஆளும் ஜார்கண்டிலும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.