ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் ஒவ்வொரு கட்டத் தேர்தல் நடைபெற்ற இடங்களிலும் பொதுக்கூட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டனர். மொத்தமுள்ள 81 தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 28 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்றவர்கள் 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.
2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் பரைத் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். தும்கா தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.