புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் வருகிற பிப்ரவரி 25ஆம் தேதி வர உள்ளது. அதனையொட்டி அதிமுக கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் அனைவரும் புரட்சித் தலைவியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக கழகத்தின் தலைமை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி கழகத்திற்கு பல்வேறு வகைகளில் வரலாற்று சிறப்புகளை பெற்று தந்து, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்திட்ட இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 75-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்ட பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி முடிந்த பிறகு 6 நாட்கள் புரட்சித் தலைவி அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிக்கையில் தெறிவிக்கப்பட்டுள்ளது.
கழகத்திற்கு பல்வேறு வகைகளில் வரலாற்று சிறப்புகளை பெற்று தந்து, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்திட்ட இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 75-ஆவது பிறந்த நாள் விழா. #Ammaforever pic.twitter.com/FfCJvtT99P
— AIADMK (@AIADMKOfficial) February 15, 2023