ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரணுக்கு 296 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 37 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 826 ரூபாய்க்கும், சவரனுக்கு 296 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 312 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 37 ரூபாய் அதிகரித்து, 3 ஆயிரத்து 665 ரூபாய்க்கும், சவரணுக்கு 296 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதேப்போல், வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து 48 ரூபாய் 60 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளி 700 ரூபாய் அதிகரித்து 48 ஆயிரத்து 600 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

Exit mobile version