கோவை துடியலூரைச் சேர்ந்த நகை வியாபாரி தங்க, வெள்ளி முகக் கவசங்களை எளிய முறையில் தயாரித்து அசத்தியள்ளார். வியாபாரியின் முகக்கவசங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது…
துடியலூரை அடுத்த என்ஜிஜிஓ காலனியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், கடந்த 35 ஆண்டுகளாக நகை கடை நடத்தி வருகிறார். இவர் ஏற்கனவே தங்கத்தை உபயோகப்படுத்தி எளிமையான ஆடைகள் தயாரித்ததற்காக இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் விருது பெற்றுள்ளார். இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகக்கவசங்களை தங்கம் மற்றும் வெள்ளியில் தயாரித்து அசத்தியுள்ளார். தங்கத்தை மெல்லிய கம்பியாக மாற்றி, முகக்கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு அடுக்கு முதல் நான்கு அடுக்கு வரை தேவைக்கு ஏற்ப முகக் கவசங்கள் தயாரித்து வழங்குகிறார். 52 கிராம் எடையுள்ள தங்க முகக்கவசத்தின் விலை 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயாகவும், வெள்ளி முகக்கவசத்தின் விலை 15 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்க மற்றும் வெள்ளி முககவசங்களுக்கு ஆர்டர்கள் அதிகரித்து வருவதாக ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
கொரோனா ஊரடங்கால் ஆபரணம் தயாரிக்கும் தொழில் தோய்வடைந்துள்ள நிலையில், முகக்கவசங்கள் விற்பனை கைகொடுத்துள்ளது ராதா கிருஷ்ணன் போன்ற நகைத் தொழிலாளர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.