சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 576 ரூபாய் அதிகரித்து 39 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக சரிந்து வந்த தங்கத்தின் விலை, மீண்டும் ஏறத் தொடக்கியுள்ளது. அந்த வகையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 223 ரூபாய்க்கும், சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து 41 ஆயிரத்து 784 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 72 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 975 ரூபாயாகவும், சவரனுக்கு 576 அதிகரித்து 39 ஆயிரத்து 800 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் 70 காசுகள் அதிகரித்து 72 ரூபாய் 50 காசுகளாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 ஆயிரத்து 700 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.