சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, 39 ஆயிரத்து 584 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை கண்டு வரும் நிலையில், இன்று சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 48 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 195 ரூபாய்க்கும் சவரனுக்கு 384 ரூபாய் குறைந்து 41 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோல், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 948 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 584 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி ஒரு கிராம் 20 காசுகள் குறைந்து 72 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 200 ரூபாய் குறைந்து 72 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.