ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலி

கஜக்கஸ்தானில்100 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக பலியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கஜக்கஸ்தானின் அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து 100 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. அங்குள்ள அடுக்குமாடிக் கட்டடத்தின் மீது மோதிய விமானம் விழுந்து நொறுங்கியது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version