ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிக ரத்து

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையில், மீண்டும் சேவை தொடங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அந்நிறுவன ஊழியர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்

பிரபல விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. இதனால், கடந்த சில நாட்களாகவே குறைந்த அளவிலான விமானங்களை மட்டுமே அந்நிறுவனம் இயக்கி வந்தது. இந்நிலையில், தனது விமான சேவையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை கண்டித்து தலைநகர் டெல்லியில் அவர்கள் போராட்டம் நடத்தினர். ஜெர் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் சேவையை தொடங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Exit mobile version