இன்று நள்ளிரவில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவை ரத்து

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் புதன்கிழமை நள்ளிரவில் இருந்து தனது அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்த உள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. விமானிகளுக்கு சம்பளம் கொடுக்க முடியாமை, எரிபொருள் செலவு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் சமாளிக்க முடியாமல் அந்த நிறுவனம் திணறி வருகிறது. கிட்டத்தட்ட 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதிச்சுமையில் சிக்கித்தவிக்கும் அந்த நிறுவனம் 400 கோடி ரூபாயை ஸ்டேட் வங்கியிடம் கேட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே நிதிச்சுமையில் சிக்கியிருக்கும்போது மீண்டும் 400 கோடி ரூபாய் வழங்க வங்கி மறுத்து விட்டது.

இந்த நிலையில் புதன்கிழமை நள்ளிரவில் இருந்து தனது அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்திவைப்பாதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் உள்ள 44 விமானங்களில் 7 மட்டுமே தற்போது இயங்கி வருகிறது.

Exit mobile version