கால்களால் விமானத்தை இயக்க உரிமம் பெற்ற முதல் பெண் விமானி ஜெசிகா..

இவ்வுலகில் சாத்தியம் இல்லாதது எதுவும் இல்லை என்று பலர் கூற நாம் கேட்டு இருப்போம் .ஆனால் அதனை செய்து காட்டி இருக்கிறார் ஜெசிகா.

அமெரிக்காவை சேர்ந்த ஜெசிக்காவுக்கு வயது 36. இவர் பிறக்கும்போது மரபணு குறைபாடு காரணமாக கையில்லாமல் பிறந்துள்ளார். இரண்டு கைகளும் இல்லை என்றாலும் தனது தன்னம்பிக்கையால் வானத்தின் எல்லைக்கே சென்று சாதனை படைத்தவர் ஆக அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார் .

ஒரு போர் ஜெட் விமானி ஜெசிகாவிடம் நீங்களும் ஒரு விமானி ஆக ஆசை இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அப்போது தான் ஜெசிக்காவின் இந்த சாதனை பயணம் தொடங்கி உள்ளது.

3 ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்கு பிறகு,விமானங்களை 10,000 அடிக்கும் மேல் இயக்கும் ஆற்றலை பெற்று, 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி கால்களால் விமானத்தை இயக்கும் உரிமத்தை ஜெசிகா பெற்றுள்ளார்.

மேலும் டேக்வாண்டோ கலையில் கையில்லாமல் black belt பெற்ற முதல் பெண்மணியும் இவர் தான். விமானியாக மட்டுமில்லாமல் பியானோ மற்றும் ஸ்கூபா டைவிங் இரண்டிலும் வல்லமை பெற்றவராக திகழ்கிறார்.

 

சாதனை படைப்பதற்கு கைகள் அவசியமில்லை என்பதை ஜெசிகா ஒரு முறை இவ்வுலகிற்கு நிரூபித்து காட்டியுள்ளார்.

Exit mobile version