கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் ஜெர்ரி பூ

கொடைக்கானலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும், ஜப்பான் பூ என அழைக்கப்படும் ஜெர்ரி பூக்களின் சீசன் துவங்கியுள்ளது.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு அழகு சேர்க்கும் விதமாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டும் பூக்கக்கூடிய ஜெர்ரி பூ தற்போது பூக்க தொடங்கியுள்ளது. இந்த பூ முதலில் வெள்ளை நிறத்திலும், பிறகு இளம்சிவப்பு நிறத்திலும், இறுதியாக ஜெர்ரி நிறத்தில் காட்சி அளிக்கிறது. இந்த பூவானது ஜப்பான் நாட்டில் தான் அதிகமாக காணப்படுவதால், ஜப்பான் பூ என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்படும் இடமான ஏரி சாலை, பிரையண்ட் பூங்கா , அப்பர் லேக் , லாஸ்காட் சாலை ஆகிய பகுதிகளில் ஜெர்ரி பூ பூத்துக்குலுங்குவதால் கொடைக்கானலே ரம்மியமாக காட்சியளிக்கிறது. சுற்றுலா பயணிகளும் ஜெர்ரி பூக்களை ரசித்து செல்கின்றனர்.

Exit mobile version