ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேர் சுட்டு கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த ஜெய்ஸ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்குமிடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அதில், இன்று அதிகாலையில் தீவிரவாதிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Exit mobile version