சோபியான் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்து வரும் நிலையில், இன்று அதிகாலை 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் பூஞ்ச், ராஜோரி, சோபியான் ஆகிய மாவட்டங்களில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஆனந்த்நாக் மற்றும் பந்திப்போரா மாவட்டங்களில் நேற்நு நடந்த தேடுதல் வேட்டைகளில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பூஞ்ச் மாவட்டத்தில் கரான்கோட் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியதில், இளநிலை அதிகாரி மற்றும் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.

எல்லைக்கட்டுப்பாட்டு கோடு வழியே, ஏராளமான ஆயுதங்களுடன் ஊடுருவிய பயங்கரவாதிகள் சாம்ரர் வனப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், பயங்கரவாதிகள் தப்பிவிடக் கூடாது என்பதால் நாலாபுறமும் வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

இதனிடையே, சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version