ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருவேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் உள்ள ஜதிபால் பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியை சுற்றிவளைத்த துணை ராணுவப்படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் சண்டை மூண்டது. இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதேபோல் ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரிடமிருந்து, ஏகே 47 மற்றும் எம் 4 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இண்டெர்நெட் சேவை முடக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனில் இருந்து, இதே ரக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version