“த்ரிஷ்யம்” படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் ஜீத்து ஜோசப்-மோகன்லால் கூட்டணி

2013ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளியானது “த்ரிஷ்யம்”. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்த படம் இந்திய சினிமா எளிதில் மறக்காத வண்ணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல மொழிகளில் ரீமேக்கான த்ரிஷ்யம் அங்கும் மகத்தான வெற்றி பெற்றது. தமிழிலும் கமல்ஹாசன் நடிப்பில் “பாபநாசம்” திரைப்படமாக வெளியானது.

இந்நிலையில் மீண்டும் இயக்குநர் ஜீத்து ஜோசப்-மோகன்லால் கூட்டணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளார். “த்ரிஷ்யம்” படத்தை போலவே நிச்சயம் இதுவும் த்ரில்லர் வகையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஹே ஜுடு படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமான திரிஷா, மலையாள சூப்பர்ஸ்டாரான மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version