கருத்துக் கணிப்பு என்பது கருத்துத் திணிப்பாக மாறிவிட்டது என்று தென்சென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் தென்சென்னையில் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளர் ஜெயவர்தன், சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் தனது பிரசாரத்தை மேற்கொண்டார். வழக்கம்போல வாக்காளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கிண்டியில் பிரசார வாகனத்தில் நின்றுக்கொண்டு பிரசாரம் மேற்கொண்ட ஜெயவர்தன், பின்னர், வாகனத்தில் இருந்து இறங்கி, அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி உள்ளிட்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருத்துக்கணிப்பு என்பது கருத்து திணிப்பாகி விட்டதாக தெரிவித்தார். பணப்பட்டுவாடா செய்து வெற்றி பெறுவதுதான் ஊழலில் திளைத்துள்ள திமுக கட்சியின் மனநிலையாக இருக்கும் என்றும் குற்றம் சாட்டினார்.
கிண்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும்வகையில் சாலையை விரிவுபடுத்தி, புதிய பேருந்து நிலையம் போன்ற வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதாகவும் ஜெயவர்தன் தெரிவித்தார்.