ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா: முதல்வர் மலர் தூவி மரியாதை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Exit mobile version