ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மகளிருக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற மகளிருக்கான விளையாட்டு போட்டியில், தமிழகத்தில் உள்ள 21 முன்னணி அணிகள் பங்கேற்று விளையாடின. இப்போடியில் முதல் பரிசை தேனி மகளிர் அணியும், இரண்டாம் பரிசை சென்னை அணியும், மூன்றாம் பரிசை மதுரை அணியும் வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கினார்.

Exit mobile version